கீழே விழுந்து நொறுங்கிய ஆளில்லா விமானம் - தோல்வியில் முடிந்த சோதனை முயற்சி
கீழே விழுந்து நொறுங்கிய ஆளில்லா விமானம் - தோல்வியில் முடிந்த சோதனை முயற்சி
கர்நாடகாவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின்(டிஆர்டிஓ) சார்பில் பெயரிடப்படாத ஆளில்லா ரஸ்டம்-2 விமானம் சோதனை செய்யப்பட்டது. சல்லேகர் வானூர்தி சோதனை பகுதியில் இருந்து, சுமார் 17 கிலோட்டர் உயரத்தில் இந்த விமானம் பறந்து கொண்டிருந்தது. அப்போது, ஆராய்ச்சி மையத்தில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில், சித்ரதுர்கா மாவட்டத்தின் ஜோடி சிக்கனா ஹல்லி பகுதியில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.
சத்தம் கேட்டதும் அருகில் இருந்த மக்கள் ஓடி வந்து பார்த்துள்ளனர். விமானம் விழுந்து நொறுங்கியது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக டிஆர்டிஓ அதிகாரிகள் மற்றும் போலீசார் அந்த இடத்திற்கு வந்தனர்.
2014 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற பாதுகாப்பு துறை கண்காட்சியில் இந்த ரஸ்டம்-2 விமானம் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. பின்னர், சல்லகரெ வானூர்தி மையத்தில் இருந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. சோதனை முயற்சிக்கு பின்னர் ராணுவத்தில் இந்த விமானத்தை பயன்படுத்த பாதுகாப்பு துறையினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால், எதிர்பாராத விதமாக சோதனை முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.
Comments
Post a Comment