பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விமானத்தளத்தை அமைக்கும் பாகிஸ்தான்!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விமானத்தளத்தை அமைக்கும் பாகிஸ்தான்!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்(Pok) பகுதியில் பாகிஸ்தான் புதிய ராணுவ விமானத்தளம் ஒன்றை அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் இது அமைக்கப்படவுள்ளது.
காஷ்மீர் எல்லையில் அத்துமீறி பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தான் அரசு 1600 மில்லியன் பாகிஸ்தானி ரூபாய் மதிப்பில் புதிய திட்டமொன்றை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் மான்ஷெரா என்ற இடத்தில் புதிய ராணுவ விமானத்தளத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் மிக அருகே இந்த இடம் உள்ளது.
இந்த இடமானது தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவிலும், தலைநகர் ஜம்முவில் இருந்து 235 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை சுற்றி 100 கிலோமீட்டர் தொலைவுக்கு பாகிஸ்தானின் விமானத்தளம் அமைந்தால் அது இந்தியாவிற்கு சற்று ஆபத்தானதாக இருக்கும். இந்த விமானத் தளத்தில் இருந்து ஸ்ரீநகர் வரவேண்டுமென்றால் 5 முதல் 6 நிமிடங்களில் விமானம் ஸ்ரீ நகரை வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment