தொடர்ந்து ஒரு மணி நேரம் இடைவெளியில் பூமியில் தொடர்பில் இருப்பதன் மூலம் முகத்தில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது

#பூமியுடன்_தொடர்பில்_இருங்கள்:
மறு பதிவு...

நம்மில் எத்தனை பேர் தினமும் பூமியுடன் தொடர்பில் உள்ளோம். அதாவது வெறும் கால்களுடன் நிலத்தில் நடக்கிறோம்? பதில் முக்கால்வாசி இல்லை என்பதே.

வெறும் கால்களுடன் நடந்தால் நோய் தொற்றிக்கொள்ளும் என சொல்லிச் சொல்லியே காலணிக்கு (செருப்பு) பழகினோம். இப்பொழுது செருப்பைவிட shoes அணிவதை மார்டனகவும், பெருமிதமாகவும் கொள்கிறோம்.

சரி, இப்போது university of  California மற்றும் Journal of Environmental and Public Health இவை இரண்டு அமைப்புகளும் மனிதன் காலணி அணியாமல் வெறும் கால்களுடன் பூமியில் நடந்தால் மனித உடம்பில் ஏற்படும் மாற்றம் பற்றி ஒரு ஆய்வு நடத்தின. அந்த ஆய்வின் முடிவில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையை பார்ப்போம்.

ஆய்வறிக்கைப்படி நாம் பூமியில் வெறும் கால்களுடன் நடப்பதால் ஏற்படும் நன்மைகள்:

புவி இயற்கையாகவே negative charge (-) கொண்டது. மற்றும் Anti-oxidants கொண்டது. எனவே வெறும் கால்களுடன் நாம் பூமியில் நடக்கும் போது  உடல் செல்களை பாதிக்கும் தொடர் செயல்முறையான ஆக்சிஜனேற்றம் தடுக்கப்படுகிறது. அதாவது உடலுக்கு நேரடியாக பூமியில் இருந்து vitamin "C" கிடைக்கிறது.

உடலில் எலக்ட்ரான் ஓட்டம் தடையில்லாமல் சீராக பராமரிக்கபடுகிறது.

எலும்பு, கல்லீரல்,மூளை(பார்கின்சன்) போன்ற உறுப்புகளை பாதிக்கும் நாள்பட்ட சிதைவு எனப்படும் Chronic Degenerative Diseases  க்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.

மற்றும் வெறும் கால்களுடன் நடப்பதன் மூலம்  Chronic stress, உடல்வலி, தூக்கமின்மை, உடல் வீக்கம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.

தொடர்ந்து ஒரு மணி நேரம் இடைவெளியில் பூமியில் தொடர்பில் இருப்பதன் மூலம் முகத்தில் இரத்த ஓட்டம்  அதிகரிக்கிறது. மற்றும் சீராக பராமரிக்கப்படுகிறது. இதன் மூலம் முகம் எப்போதும் பொலிவுடன் இருக்கிறது   (முகத்திற்கு முகபொலிவிற்காக பயன்படுத்தும் cream அவசியம் இருக்காது)

மிகமுக்கியமாக  Blood Viscosity (இரத்த பாகுத்தன்மை) குறைக்கப்படுகிறது. இதனால் இதயநோய்கள் முற்றிலும் குறைக்கபடுகிறது.

எனவே இயற்கையோடு இயைந்து வாழ கற்றுக்கொள்ளுங்கள் இதுவே நமக்கும் நம் தலைமுறைக்கும் நல்ல வாழ்வியலை தரும் மற்றும் நாகரிகத்தால் வரும் நோய்களை களையெடுக்கும்.

Comments

Popular posts from this blog

India vs Pakistan: These cricket jokes and memes on the match have left everyone in splits

The police were scattered in Tanjore Biggiwil as threatening to launch a protest against the Methane project